பிடிக்காத பதிவை அன் லைக் செய்யலாம்….இன்ஸ்டாவின் சூப்பர் அப்டேட்

சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இதனை கருத்திற்கொண்டு இன்ஸ்டாகிராமில் தற்போது டிஸ்லைக் செய்யும் புதிய அம்சம் சோதனை நிலையில் உள்ளது.
இந்த டிஸ்லைக் அம்சமானது, பயனர்கள் விரும்பாத அல்லது தரக் குறைவான கருத்துக்களுக்கு அவர்களது எண்ணத்தை பதிவிடலாம்.
ஆனால், இவ்வாறு டிஸ்லைக் செய்யப்படுவது ஏனையோருக்கு தெரியாது.
இந்த அம்சம் மூலம் எதிர்மறையான விடயங்கள் கீழே தள்ளப்பட்டு நேர்மறையான விடயங்கள் முக்கியத்துவம் பெறும்.
சோதனைக் கட்டத்தில் இருக்கும் இம் முயற்சி வெற்றி பெறுமா என்பது எதிர்காலத்தில் தெரியும்.