மீண்டும் தொடங்கும் சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’ பட வேலைகள்…
சுந்தர் சி முதல் தடவையாக 8 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை கருவாகக் கொண்டு சங்கமித்ரா எனும் திரைப்படத்தை உருவாக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார்.
இப் படத்தில் ரவி மோகன், ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது.
அதுமட்டுமின்றி இப் படத்துக்கான போஸ்டர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப் படத்தில் பல க்ராபிக்ஸ் காட்சிகள் வைப்பதாகவும் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்காமல் கிடப்பில் போடப்பட்டடது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சங்கமித்ரா பட வேலைகளை ஆரம்பிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..
அடுத்த வருடம் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் விரைவில் திகதி, நடிகர், நடிகைகளின் பட்டியல் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.