கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
![கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/1686107239-Gajendrakumar-Ponnambalam-MP-L-1.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தப் பகுதிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு குழுவுடன் வந்து தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்னால் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.