ஈட்டி எறிதலில் உள்நாட்டு சாதனையை முறியடித்தார் சுமேத ரணசிங்க

ஈட்டி எறிதலில் உள்நாட்டு சாதனையை முறியடித்தார் சுமேத ரணசிங்க

தியகமாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உள்நாட்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் சுமேத ரணசிங்க 85.78 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக 2024 ஆம் ஆண்டு ருமேஷ் தரங்கா 85.45 மீட்டர் எறிந்தமை இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

இதற்கிடையில், இன்றைய சுமேத ரணசிங்கவின் செயல்திறனுடன், செப்டம்பர் மாதம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சம்பியன்ஷிப்பிற்கு அவர் நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டில் உலக தடகள கூட்டமைப்பு இந்த போட்டிக்கான தகுதி விதிமுறைகளை திருத்திய பின்னர், உலக தடகள சம்பியன்ஷிப்பிற்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இலங்கை தடகள வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Share This