‘சுழல் 2’ வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது

பிரம்மா மற்றும் சர்ஜூன் கேஎம் இயக்கத்தில் சுழல் 2 வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடரின் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
இதில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இத் தொடரின் இரண்டாம் பாகமானது க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த பாகத்துக்கான கதையை புஷ்கர் – காயத்ரி எழுதியுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி இத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளநிலையில், தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.