டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மாத்திரம் 321 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் மட்டும் 3178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 20 டெங்கு அபாயப் பகுதிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை குறைவடைந்துள்ள நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் பதிவாகும் அபாயம் காணப்படுவதாக சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.