தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சடுதியான வீழ்ச்சி

உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய (31) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளதுடன், இது நேற்றுடன் (30) ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும். சதவீத அடிப்படையில் இந்த வீழ்ச்சி 8.15% ஆகும்.

வெள்ளி விலைகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன்,  இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 29.16 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது. சதவீத அடிப்படையில் இது 25.46% ஆகும்.

இதற்கமைய, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையிலிருந்து சுமார் 15 ட்ரில்லியன் டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டை விட இன்னும் இரண்டு மடங்கு உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )