ஒதுக்கீட்டு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

ஒதுக்கீட்டு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனங்கள் தொடர்பிலான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று வியாழக்கிழமை  நாடாளுமன்றில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்ததுடன், சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெற்றும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பும் 25 ஆம் திகதி இடம்பெறும்.

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்று 21ஆம் திகதி மூன்றாம் வாசிப்புடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய வேட்புமனுக்களை கோருவது தொடர்பான உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலமும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  இந்த சட்டமூலத்தை இன்று சபையில் சமர்ப்பித்ததுடன், நாளை வெள்ளிக்கிழமை சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெற உள்ளது.

இந்தசட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக, உள்ளூராட்சி தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

CATEGORIES
TAGS
Share This