நவம்பர் மாத பருவகால சீட்டை டிசம்பரிலும் பயன்படுத்தலாம் – மாணவர்களுக்கு சலுகை

நவம்பர் மாத பருவகால சீட்டை டிசம்பரிலும் பயன்படுத்தலாம் – மாணவர்களுக்கு சலுகை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நவம்பர் மாத பருவகால சீட்டை பயன்படுத்தி
இந்த மாதம் பயணிக்க பாடசாலை மாணவர்களுக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மாத பருவகால சீட்டை வழங்குவதன் மூலம் சலுகையைப் பெறலாம் என போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அண்மைய பேரிடர் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேரிடரால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படாது என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு உத்தியோகப்பூர்வ சீருடைகள் தொடர்பான தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )