
இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் (Isaac Herzog) அவுஸ்திரேலியப் பயணத்திற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்ட யூத சமூகத்திற்கு ஆதரவளிக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இருப்பினும், காசா போரில் 70,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதால், இந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டின் ஒற்றுமைக்காக இந்த வருகை அவசியம் என அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் தெரிவித்துவரும் நிலையில், சிட்னி போன்ற முக்கிய நகரங்களில் பாரிய போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு உச்சகட்டமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
CATEGORIES உலகம்
TAGS isreal
