மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்

மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து யாங்கோன் நகரத்திலிருந்தும் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கிலும் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Share This