
கோரெட்டி புயல் – கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வேல்ஸ்
கோரெட்டி புயல் பனிப்பொழிவு மற்றும் உறைபனியுடன் கடுமையான குளிர்காலத்தை வேல்ஸ் எதிர்கொண்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் சேவைகளில் சில இடையூறுகள் இன்று (Saturday) வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை நண்பகல் வரை வேல்ஸின் பெரும்பகுதிகளில் பனிக்கட்டி மூடப்படுவதற்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Warning for Ice) விடுக்கப்பட்டுள்ளது.
உருகிய பனி மீண்டும் உறைந்து, குளிர்கால மழை மற்றும் உறைபனியுடன் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
