
காசாவை தாக்கும் புயல் பைரன் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
காசாவில் பைரன் புயல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று, இடைவிடாத மழை மற்றும் இடிந்து விழும் கட்டமைப்புகள் காரணமாக, இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலால் ஏற்கனவே இடம்பெயர்ந்த குடும்பங்கள் மேலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த புயல் காரணமாக வடக்கு காசாவில் உள்ள பிர் அன்-நாஜாவில் (Bir an-Naaja) இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு தங்குமிடம் அளித்த வீடொன்று
இடிந்து வீழ்ந்ததில் நேற்று இரவு வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக காசா உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்று அதிகாலை காசா நகரின் ரெமால் பகுதியில் சுவர் இடிந்து கூடாரங்கள் மீது வீழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
