
பிரித்தானியாவை தாக்கும் பிராம் புயல் – அம்பர் எச்சரிக்கை விடுப்பு
பிரித்தானியாவில் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அம்பர் எச்சரிக்கை உள்ளிட்ட கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வடமேற்கு ஸ்காட்லாந்து முழுவதும் மணிக்கு 90 மைல் (மணிக்கு 144 கிமீ) வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், புதன்கிழமை வரை பலத்த காற்று பரவலாக உணரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் கனமழை வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும் எனவும் அங்த பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் நிலம் ஈரத்தன்மையுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக சேதம் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரிஷ் வானிலை ஆய்வு மையத்தால் பெயரிடப்பட்ட பிராம் புயல், இன்று செவ்வாய்க்கிழமை வேகமாக உருவாகி, இங்கிலாந்தின் வடக்கே மேற்கே நகர்ந்து, பலத்த மழையையுடன், பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ஐரிஷ் கடல் கடற்கரைகளைச் சுழவுள்ள பதிகளிலும், ஸ்காட்லாந்தின் வடமேற்கு வரையிலும் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை GMT4:00 மணி முதல் 23:59 மணி வரை காற்றுக்கான வானிலை அலுவலக அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேற்கு ஸ்காட்லாந்தை உள்ளடக்கிய வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் மணிக்கு 90 மைல் (மணிக்கு 144 கிமீ) வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில போக்குவரத்து வலையமைப்பில் தாமதங்கள், ரத்துசெய்தல்கள் மற்றும் சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
