நெல் கொள்வனவுக்காக திறக்கப்படும் களஞ்சியசாலைகள்
நெல் கொள்வனவுக்காக இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நெல் அறுவடை செய்யப்படும் இடங்களான கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிலிருந்து 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (05) அரசாங்கம் ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பா நெல் 125 ரூபாய்க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 132 ரூபாய்க்கும் கொள்முதல் செய்வதாக அறிவித்திருந்தது.