கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்கள் இன்று புதன்கிமை பாரியளவில் சரிவடைந்துள்ளன.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்
இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைவடைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

Share This