50 ரூபாவிற்கு உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

50 ரூபாவிற்கு உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும், தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

முவன்கல மற்றும் உக்சிரிபுர பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

“சந்தையில் சீனி விற்பனை தற்போது ஐந்து வணிகர்களின் அதிகாரத்தின் கீழ் நடைபெறுவதால், அதன் விலை இவ்வளவு உயர்ந்துள்ளது.

எனவே, உள்நாட்டு சந்தையில் சீனி விற்பனை சாத்தியமில்லாத பட்சத்தில், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்த அதிகாரத்தை ஒழித்து, சர்க்கரை தொழிற்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்போம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹிகுரான கல்‌ஓய சர்க்கரை தொழிற்சாலை 51 வீதம் அரசாங்கத்திற்கு சொந்தமானதாயினும், அதன் உரிமை அரசால் பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக இன்னும் அந்த நிறுவனத்துக்கு நேரடி அழுத்தம் வழங்கப்படவில்லை என்றாலும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This