மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை

மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை

மகாபொல உதவித்தொகை பெறுவோருக்கு அந்தக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் நேற்று (24) இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இங்கு, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை குறைக்க எடுக்கக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் ஏனைய ஆண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நீண்ட கால திட்டமாக மகாபொல உதவித்தொகை பெறுவோருக்கான கணினிமயமாக்கப்பட்ட தரவு முறையை நவீனமயமாக்குவது தொடர்பாகவும் பிரதி அமைச்சரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்ன உள்ளிட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் மகாபொல அறக்கட்டளை நிதியத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This