வாரத்திற்கு ஏழு லட்சம் தேங்காய் வினியோகம் செய்ய நடவடிக்கை

வாரத்திற்கு ஏழு லட்சம் தேங்காய் வினியோகம் செய்ய நடவடிக்கை

லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு தேங்காய் விற்பனை செய்வதற்காக வாரத்திற்கு ஆறு முதல் ஏழு இலட்சம் தேங்காய்கள் விநியோகிக்கப்படுவதாக சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக நான்கு அரச தோட்டங்களைச் சேர்ந்த கிளைச் சங்கங்களில் இருந்து தேங்காய் ஒன்று தலா 110 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னந்தோப்பு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது கிளைச் சங்கங்களில் இருந்து தேங்காய்கள் சேகரிக்கப்படுவதாக தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்காக எதிர்பார்க்கப்படும் வருடாந்த தேங்காய் அறுவடை மூன்று பில்லியனாக உள்ளதுடன் இந்த வருடம் தேங்காய் அறுவடை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளது.

தென்னை உற்பத்தி குறைவதற்கான முக்கிய காரணங்கள் விலங்குகள் சேதம், காலநிலை மாற்றம், பூச்சி சேதம் மற்றும் உரங்களின் பயன்பாடு குறைவு ஆகியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This