
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஸ்டார்மர், வலியுறுத்தல்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நாடு கடத்துவதை எளிதாக்க மனித உரிமைச் சட்டங்களை சீர்திருத்துமாறு பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில் மாற்றங்கள் குறித்து நடைபெற உள்ள கலந்துரையாடலை முன்னிட்டு இது தொடர்பில் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதைத் தவிர்க்க, ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில் உள்ள “குடும்ப வாழ்க்கைக்கான உரிமை” பிரிவைப் பயன்படுத்தி புகலிடம் கோருபவர்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ஆட்கடத்தலை இலக்காகக் கொண்டு, ஐரோப்பாவில் உரிமம் இன்றி இருப்பவர்களை தடுத்து வைக்க “திரும்பும் மையங்களை” அமைப்பதற்காக விதிகளை மாற்றுமாறு பிரதமர் வலியுறுத்துகிறார்.
இதேவேளை, கன்சர்வேடிவ் மற்றும் Reform UK கட்சியும் ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டிலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என வலியுறுத்துகின்றன.
ஆனால் வெகுன இடம்பெயர்வை சமாளிக்க, ஐரோப்பிய மனித உரிமை சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
