ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்தார் ஸ்டாலின்

ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்தார் ஸ்டாலின்

ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரச முறை பயணமாக ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று ஜேர்மனியை சென்றடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்ற புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஜேர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்தேன். தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன்.” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )