நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம்

நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம்

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் 34 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு
சென்று முதலீட்டாளர்களை சந்தித்து அவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்துள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )