
தமிழ்நாடு தீவிரவாத மாநிலமா – ஸ்டாலின் கண்டனம்
‘தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசும் ஆளுநர், தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என கூறியிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டம் வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், உரையாற்றிய போதே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இக்கட்டான சூழல்களில், தன்னுடைய தேசப்பற்றுக்காக, படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது தமிழ்நாடு என்றும் அவர் பெருமிதமடைந்தார்.
தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு வன்மையானது என்றும் ஸ்டாலின் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக சீர்குலைக்கவே பாஜக, ஒருவரை ஆளுநரை நியமித்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையை போல, கோவை, மதுரையின் வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில் தேவை என் கோரிக்கை வைத்துள்ள போதிலும். ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனை நிராகரித்துள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
