கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா – அனைத்து ஏற்பாடுகளும் தயார்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா – அனைத்து ஏற்பாடுகளும் தயார்

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருவிழாவை வெற்றிகரமாக நடாத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி, இவ்விழாவுக்கு வரும் கப்பல்களுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இன்று (2025 மார்ச் 10) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், இன்று (2025 மார்ச் 10) பெருவிழாவிற்கு வரும் மக்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக கச்சத்தீவில் தகவல் தொடர்பு கோபுரம் நிறுவும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவு மற்றும் கரையோர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் பாதுகாப்பு கெமரா அமைப்பை பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதுடன், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவ கடற்படையின் முழு உழைப்பு, தொழில்நுட்ப மற்றும் வள பங்களிப்பை வழங்குவதற்கு மற்ற அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This