2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்

2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்

2023ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2022ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ.73.254 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 617 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 120 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 298 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 61 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

Share This