இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்பி

இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்பி

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் சகிதம் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

இலங்கையிலே மக்களுக்கு பாதுகாப்பு உண்டு . இலங்கை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று கூறுகின்ற இந்த அரசாங்கத்திற்கு மத்தியில் ஒரு தமிழ் இளைஞரின் உயிர் மிக மோசமாக முறையில் அடித்து படுகொலை செய்யப்படுள்ளார்.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு வடிவமாக தொடர்ந்தும் இந்த மண்ணிலே நடைபெறுகின்ற பல்வேறுபட்ட கொலைகள் , அச்சுறுத்தல்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இன அழிப்பு நடவடிக்கையினுடைய தொடர்ச்சியாகவே கபில்ராஜ்சுடைய மரணத்தையும் பார்க்கின்றோம்.

தொடர்ந்தும் இந்த மண்ணிலே மக்கள் மிக மோசமாக கொல்லப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் யுத்தம் முடிவடைந்து கடந்த போதும் ஒரு வெடிச்சத்தம் கேட்காத இந்த பிரதேசத்தில் இவ்வளவு பாரிய முகாம்களை வைத்து கொண்டு அந்த இராணுவ பிரசன்னத்தோடு மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான எதேச்சாதிகாரமான இனப்படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒரு மனித பேரவலத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கி கொண்டிருக்கின்றது. மக்களுக்கு அச்சத்தை கொடுத்திருக்கின்றது. இதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு கண்டனங்கள் தெரிவிப்பதோடு.

இது தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கான உரிமை பயணத்தில் நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை சரியான முறையில் பதிவு செய்வோம். இறந்த குறித்த இளைஞனினுக்கு நீதி கிடைக்க எப்போதும் எமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என என மேலும் தெரிவித்தார்.

Share This