இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

இவ்வாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இம்முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் கிலோகிராமினால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 18.76 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈராக் முன்னிலை வகிக்கின்றது.
இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் ஈராக் 3.02 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை இறக்குமதி செய்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.