இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் – அரசாங்கம் மகிழ்ச்சியில்

்தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் -2.0% உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் -4.0% ஆகக் குறைந்துள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உணவுப் பணவீக்கமும் டிசம்பர் 2024ஆம் ஆண்டு டிசம்பரில் -1% உடன் ஒப்பிடும்போது, 2025 ஜனவரியில் -2.5% ஆகக் குறைந்துள்ளது.
2025 ஜனவரி மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 206.4 ஆகும். மேலும் 2024 டிசம்பர் உடன் ஒப்பிடும்போது 1.8 குறியீட்டுப் புள்ளிகள் அல்லது 0.88 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்கிறது. அதற்கான குறியீடு 204.6 ஆகும்.
2025 ஜனவரியில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் -4.0% ஆகவும், 2024 டிசம்பரில் கணக்கிடப்பட்ட பணவீக்கம் -2.0% ஆகவும் இருந்ததாக தரவுகள் மேலும் கூறுகிறது.
மாதாந்திர அடிப்படையில், உணவுக் குழுவின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2024 டிசம்பரில் -1.0% இலிருந்து 2025 ஜனவரியில் -2.5% ஆகவும், உணவு அல்லாத குழுவின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2024 டிசம்பரில் -2.9% இலிருந்து 2025 ஜனவரியில் -5.2% ஆகவும் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் அரசாங்கம் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் பொருட்கள், சேவைகளுக்கான விலைகளை குறைக்கும் பல்வேறு முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.