2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 5.87% வளர்ச்சியாகும்.

2025 மார்ச் மாதத்தில் சந்தை பொருட்கள் மற்றும் சேவைகள் எனும் இரண்டு உட்பட மொத்த ஏற்றுமதி 1,507.90 வரை அதிகரித்தது.

இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 6.24% கவர்ச்சிகரமான வருடாந்த வளர்ச்சி மற்றும் 2025 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் பொது 11.76% மாதாந்த அதிகரிப்பாகும்.

CATEGORIES
TAGS
Share This