இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஜனவரி மாதத்தில் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஜனவரி மாதத்தில் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 சதவீத அதிகரிப்பும், விவசாய ஏற்றுமதி வருவாயில் 14.87 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை கூறியுள்ளது.

தொழில்துறை ஏற்றுமதி வருவாயில் 0.08 சதவீதமும், சேவை ஏற்றுமதி வருவாயில் 37.87 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதி வருவாய் 1,334.19 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது நிலையான பொருளாதார வெற்றிக்கு வழி வகுக்கும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

Share This