
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும்
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளால்,இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமான வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளையும் விஞ்சும் என அவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாத இறுதியில் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி, சுமார் 650 பேரைக் கொன்றதுடன் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 10 வீதமானோரை பாதித்திருந்தது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதார சரிவிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்த தருணத்தில் டித்வா சூறாவளி காரணமதக அடுத்த ஆண்டு மீள்கட்டமைப்பு செலவுகள் 7 பில்லியன் டொலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
