இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக நேர்மறை வளர்ச்சியை காண்பித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில் 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2,74,19,804 மில்லியன் ரூபாவிலிருந்து இருந்து 2,98,98,564 மில்லியன் ரூபாவாக அதிகரித்து, 9 சதவீத நேர்மறை மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு விலையில் விவசாயத்துறை 8.3 சதவீதமும், கைத்தொழில்துறை 25.5 சதவீதமும் சேவைத்துறை 57.5 சதவீதமும் பங்களித்துள்ளன.

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சியுற்ற மொத்த தேசிய உற்பத்தி, 2024ஆம் ஆண்டில் வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளது.

இது எதிர்காலம் குறித்த நம்பிக்கையான எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This