
மாலைத்தீவில் விமான நிலையத்தில் சண்டையிட்ட இலங்கையர்களுக்கு விளக்கமறியல்
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) நடந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் நடந்தது.
இதன்போது, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் அன்று இரவு விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 46 மற்றும் 43 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை, குற்றவியல் நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், அவர்கள் மரியாதைக்குரிய வேலைகளில் பணியாற்றுபவர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
குற்றம் செய்யும் நோக்கத்துடன் விமான நிலையத்தில் சண்டையிடவில்லை என்பதையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
