மியன்மார், தாய்லாந்து நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

மியன்மார், தாய்லாந்து நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

மியான்மரில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தின் தாக்கம், மியான்மருக்கு அருகில் உள்ள தாய்லாந்திலும் வெகுவாக உணரப்பட்டது. பாங்காகில் சில உயர்ந்த கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து ஆறு பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிலைமையை விரைவாக ஆராய்ந்து, மீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மியன்மார் மற்றும் தாய்லாந்து நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share This