மலேசியாவில் இலங்கை இளைஞன் பலி

மலேசியாவில் இலங்கை இளைஞன் பலி

மலேசியாவின் ஷா ஆலம், டமான் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 27 வயதுடைய இலங்கை இளைஞர் என தெரியவந்துள்ளது.

உடலை நெருங்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

CATEGORIES
TAGS
Share This