விமானத்திலேயே உயிரிழந்த இலங்கைப் பெண்
பாரிஸ் நோக்கிச் சென்ன விமானத்தில் பயணித்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. தோஹாவிலிருந்து பாரிஸ் சென்ற விமானத்தில் பயணித்த 81 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதார்.
பாரிஸ் செல்லும் விமானத்தில் இலங்கைப் பெண் ஒருவர் சுகயீனமடைந்துள்ளதாக குர்திஸ்தான் பிராந்தியத்தின் அதிகாரிகள் தங்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக எர்பிலில் உள்ள இலங்கையின் தூதர் அகமது ஜலால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதனையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். விமானம் மாலை 5:40 மணிக்கு எர்பில் விமான நிலையத்திற்கு வந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், மருத்துவக் குழுக்கள் உதவி வழங்க வந்ததாகவும், எனினும், அந்தப் பெண் விமானத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
81 வயதான அந்தப் பெண் பிரான்சில் வசித்து வந்தார். பிரெஞ்சு குடிமகனான அவரது மகனை இலங்கைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் தாயாரின் உடலை பாரிஸுக்கு கொண்டு செல்ல உதவுமாறு மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை விமானப் போக்குவரத்துச் செய்தி நிறுவனத்தின்படி, இந்த விமானம் கத்தார் ஏர்வேஸுக்குச் சொந்தமானது. இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.