பாம்புகளை கடத்தி வைந்த இலங்கைப் பெண் விமான நிலையத்தில் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டு பாம்புகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, 40 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணி தனது பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாம்புகளுடன், சென்னை வழியாக பாங்காக்கிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1173 மூலம் இலங்கை வந்திருந்தார்.
சட்டவிரோத வனவிலங்கு கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த பறிமுதல் எடுத்துக்காட்டுகிறது என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் சுங்க கட்டளை, விலங்கினங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளை மற்றும் விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளு்ளது.
பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும், நாடுகடந்த வனவிலங்கு கடத்தலுக்கான மையமாக நாடு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை சுங்கத்துறை தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.