இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவற விட்ட இலங்கை மாஸ்டர்ஸ் அணி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 180 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதன்படி, நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணியும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.