இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

பொதுக்குழு கூட்டத்தில், மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு , மீனவர்கள் போராட்டத்துக்கு தீர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் உள்பட மொத்த 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நன்றி – தி ஹிந்து

1. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்

2 : மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

3: பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்கக் கூடாது.

தீர்மானம் 4: இருமொழிக்கொள்கையில் உறுதி

5 : நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை

6 : மாநில அரசுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

7: பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க , சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.

8: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.

9: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்காரணமான கையாலாகாத தி.மு.க அரசுக்குக் கண்டனம்

10: டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணி நடத்தப்பட வேண்டும்.

11 : சமூக நீதியை நிலைநிறுத்த. சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.

12: இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு

13: பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக.

14: கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்

15: தலைவருக்கே முழு அதிகாரம்:

16: கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:

17: கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்:

Share This