பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்

பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ , 62.51 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷானுக கோஸ்டா , 47.72 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.

CATEGORIES
TAGS
Share This