போர் பயிற்சியில் ஈடுபட இந்திய சென்ற இலங்கை கடற்படை குழு

போர் பயிற்சியில் ஈடுபட இந்திய சென்ற இலங்கை கடற்படை குழு

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான இருதரப்பு ‘SLINEX – 2024’ கடற்படை பயிற்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்கும் இலங்கை கடற்படை கப்பல் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கடற்படை பயிற்சி நடத்தப்படுகிறது.

இதன்படி, SLINEX – 2024 இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இம்முறை கடற்படையின் குழுவொன்று இந்தியா சென்றுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Share This