நடுவானில் விமானத்தில் பாலியல் வன்கொடுமை – இலங்கையர் மீது குற்றம் குற்றச்சாட்டு
சர்வதேச விமானத்தில் அநாகரீகமான (பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்று (டிசம்பர் 19, 2024) பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இலங்கையிலிருந்து மெல்போர்ன் சென்ற விமானத்தில் நேற்று (புதன்கிழமை, டிசம்பர் 18, 2024) ஒரு பெண் பயணியிடம் அநாகரீகமான செயலைச் செய்ததாக 41 வயதான அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் (AFP) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், விமான ஊழியர்களுக்கு தகவல் அளித்த பின்னர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானம் மெல்போர்ன் விமான நிலையத்தை அடைந்ததும் பொலிஸ் அதிகாரிகள் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
விமானப் போக்குவரத்து சட்டம் 1991 (Cth) இன் பிரிவு 15 (1) இன் கீழ் குற்றச் சட்டம் 1900 (ACT) இன் பிரிவு 60 (1) க்கு மாறாக, அந்த நபர் மீது ஒரு அநாகரீகமான செயலுக்கான குற்றச்சாட்டு சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஜனவரி 9, 2025 அன்று மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு. விமானத்தில் பயணிக்கும்போதும், அவுஸ்திரேலிய சட்டத்தின்படி மக்கள் கட்டுப்படுகிறார்கள்.
மேலும் யாராவது ஒரு குற்றச் செயலைச் செய்ததற்கான சான்றுகள் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று AFP அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.