முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருமான-செலவு இடைவெளி 32.3 வீதமாக குறைந்தது

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருவாய்-செலவு இடைவெளி 32.3 வீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவதற்கான காரணம், மானியங்கள் உட்பட அரசாங்க வருவாய் 24.7 வீதம் அதிகரித்து 2.3 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அரசாங்க வருவாய் 1.8 டிரில்லியன் ரூபாவா பதிவாகியிருந்துது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வருமான வரி வருவாய் முந்தைய ஆண்டை விட 447 பில்லியன் ரூபாவில் இருந்து 489 பில்லியன் ரூபாவாக 9.2 வீதம் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் VAT வருவாய் 645 பில்லியன் ரூபாவில் இருந்து 876 பில்லியன் ரூபாவாக 27.6 வீதம் அதிகரித்துள்ளது.
வாகன இறக்குமதியிலிருந்து வரும் வரி வருவாய் முந்தைய ஆண்டை விட 335.6 வீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் 129.1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.