
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி – கலந்துரையாடலை ஆரம்பித்துள்ள இலங்கை அரசாங்கம்
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தஹஸ்கரியனுடன் (Levan S. Dzhagaryan) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று வெளிவிவகார அமைச்சில் கலந்துரையாடியுள்ளார்.
மத்திய கிழக்கு போர்ச்சூழலால் வளை குடா நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் விடயத்தில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையிலேயே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளதால் பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன.
இலங்கையின் மேற்படி கோரிக்கை தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படும் என ரஷ்ய தூதுவர் வெளிவிவகார அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
