ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை முன்னிட்டு, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.