மடகஸ்கார் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களும் விளக்கமறியல்

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 08 இலங்கை மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
‘ரூட் பபா 06’ என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி 8 மீனவர்களுடன் வென்னப்புவவிலிருந்து புறப்பட்டது.
கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கடந்த மாதம் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
உணவு மற்றும் பானம் உள்ளிட்ட சரியான வசதிகள் இன்மையால் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது மடகாஸ்காரில் சிறையில் உள்ள 8 இலங்கை மீனவர்களை விடுவிக்க சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக மடகாஸ்கார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு பிரெஞ்சு மற்றும் சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளரகள்; இன்மையால் அடுத்த மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்