சீன குன்மிங் மருத்துவ பல்கலைக்கு இலங்கை குழுவினர் விஜயம்

சீனாவின் குன்மிங் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு இலங்கைக் குழுவினர் விஜயம் செய்தனர்.இக்குழுவில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் இந்திரானந்த அபேசேகர, சங்கத்தின் உதவிச் செயலாளர் மதுஷான் குலரத்ன, மாலைதீவு சீன வர்த்தக மற்றும் கலாசார அமைப்பின் தலைவர் மிதும் சவுட், பங்களாதேஷ் சீன மக்கள் நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷாஹிரார் ஜமான் ஷுமன் ஆகியோர் சென்றுள்ளனர்.