துனித் வெல்லலகே நாடு திரும்பினார்

இலங்கை அணியின் சகல துறை வீரர் துனித் வெல்லலகே இன்று (19) காலை நாடு திரும்பினார்.
துனித் வெல்லலகேயின் தந்தை நேற்று திடீரென உயிரிழந்த நிலையில் அவர் இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
அபுதாபியிலிருந்து எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் இன்று காலை 8:25 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தார்.
வெல்லலகேவுடன் இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரி ஒருவரும் வருகை தந்திருந்தார். விமான நிலைய சம்பிரதாயங்கள் விரைவாக முடிக்கப்பட்டு அவர் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரங்க வெல்லலகே, செப்டம்பர் 18 அன்று தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை குழு B போட்டியில் அவரது மகன் இலங்கையை பிரதிநிதி விளையாடிக்கொண்டிருந்த போது அவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.