
இலங்கை அணி படுதோல்வி – சங்கக்கார அதிருப்தி
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சூப்பர் எட்டுச் சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று போட்டியிட்டிருந்தன.
கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்தது.
இது குறித்து, குமார் சங்கக்கார தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,
இலங்கை அணியில் பந்து வீச்சாளர்கள் ஒரு திட்டத்தின் படி செயல்பட்டாலும், துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து அத்தகைய திட்டமிடல் எதுவும் காணப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழு அணியும் மிகவும் மோசமான ஆட்ட பாணியை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமில் மிஷாராவின் விளையாட்டு பாணி உயர் மட்டத்தில் இல்லை என்று சங்கக்கார தனது பதிவில் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணம், ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் தற்போதைய சூழ்நிலையை துடுப்பாட்ட வீரர்கள் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதே என்று சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
