இலங்கை அணிக்கு 296 ஓட்டங்கள் வெற்றி இலக்கு – போட்டி சமநிலையில் முடிய அதிக வாய்ப்பு

இலங்கை அணிக்கு 296 ஓட்டங்கள் வெற்றி இலக்கு – போட்டி சமநிலையில் முடிய அதிக வாய்ப்பு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும்.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பாக அணித்தலைவர் ஷான்டோ 125 ஓட்டங்களையும் ஷட்மன் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதற்கமைய, பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 296 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 5 ஓவர் நிறைவில் 22 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இன்றைய நாள் ஆட்டம் நிறைவுபெற இன்னமும் 32 ஓவர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில்தான் முடிவடைய வாய்ப்பு 99 சதவீதம் இருப்பதாக போட்டி வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )